Search
Saturday 25 September 2021
  • :
  • :

ஓமம் மருத்துவ குணங்கள்!

ஓமம் மருத்துவ குணங்கள்!

ஓமம் அசமதா ஓமம், ஓமம், குராசாணி ஓமம்      

ஓமம் மருத்துவ குணங்கள்!
***
உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
**
வயிறுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
**
புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
**
மந்தம்

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
**
பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
**
சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் – 252 கிராம்
ஆடாதோடைச் சாறு – 136 கிராம்
இஞ்சி ரசம் – 136 கிராம்
பழரசம் – 136 கிராம்
புதினாசாறு – 136 கிராம்
இந்துப்பு – 34 கிராம்

சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
**
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. சோர்வு நீங்க ஓமத்தண்­ர்

நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
***
10. தொப்பையை குறைக்க

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
**
11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து”
” ஓமம், சீரகம் கலவை ” வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. ” ஜெலூசில் ” போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.
செய்முறை :

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.

மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக “கல்யாண சமையல் சாதம் ” சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !

12. இடுப்பு வலி நீங்க:

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.

குராசாணி ஓமம் காட்டு வகையைச் சார்ந்தது. மருந்தாக மாத்திரம் பயன்படும். மற்ற இரண்டு வகைகளான அசமதா ஓமம் மற்றும் ஓமம் உணவுப் பொருளாகப் பயன்படும். மிக அதிக அளவில் கேல்ஷியம் மற்றும் இரும்புச் சத்து, ஓமத்தில் உள்ளது. அசமதா ஓமம், ஓமத்தை விட சிறிய செடி, ஆனால் விதை ஓமத்தை விட உருவில் பெரியது. காரம் அதிகம். ஆட்டின் மணம் இதில் அதிகம். ஆட்டிற்கும் இந்தச் செடியிடம் அதிக பிரியம். ஆகவே அஜமோதா என்று பெயர். இரண்டும் குணத்தில் ஒரே தரத்திலுள்ளவைதான்.
“ரஸே பாகே ச கடுகோ வீர்யோஷ்ணஸ்த்வஜமோதக:
தீபன: பாசன: சூலகிருமிக்ன: கபபித்தஹா
-மதனாதி நிகண்டு.
சுவையிலும், ஜீர்ணமான பிறகும் காரமானது. உடலில் சூடு குறையாமல் பாதுகாப்பது, சூட்டை அதிகப்படுத்துவது. எளிதில் ஜீர்ணமாவது, பசியையும் ஜீரண சக்தியையும் தூண்டி எளிதில் மற்றதை ஜீரணமாக்குவது. உணவு செரிக்கையில் வாயு அதிகமாகாமல் மேல் வயிற்றை லேசாக ஆக்கி, ஹிருதயத்தின் மேல் பளுவை உணராமல் செய்வது, வயிற்றில் வாயு கபம் தங்காமல் மேலும் கீழுமாக அவைகளைப் பிரித்து வெளியேற்றவது, மலம் அழுகவிடாமல் செய்து கிருமிகள் உற்பத்தியாவதைத் தடை செய்வது,உண்டான கிருமிகளைச் செயலிழக்கச் செய்து வெளியேற்றவது, வாய் நாற்றம், குடல் நாற்றம், புளிப்பு வாடை இவைகளை அகற்றுவது,வயிற்றில் வாயுக்கட்டு, கபக்கட்டு, அடைப்பு, மலக்கட்டு இவைகளை அகற்றி குத்துவலி வேதனை, உப்புசம் இவைகளை ஜீரகம் போல மணப்பொருளாக இதையும் சமையலில் சேர்க்கிறார்கள்.
“அஜமோதா கடுஸ்தீக்ஷ்ணா தீபனீ கபவாதனுத்
உஷ்ணா விதாஹிணி ஹ்ருத்யா வ்ருஷ்யா பலகரீ லகு:
நேத்ராமய கபச்சர்தி ஹிக்கா வஸ்தி ருஜோ ஹரேத்
-பாவபிராகச:
பாவபிராகசர் குறிப்பிடுகையில் “ஓமம் காரம், உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடது, பசியைத் தூண்டி கப வாதங்களை குறைக்கும்,சூடானது, எரிச்சலைதூண்டும், இருதயத்திற்கு இதமானது, விந்துவை கூட்டி, பலத்தைக் கொடுத்து, லேசான தன்மையால் எளிதில் ஜீர்ணமாகும். கண் நோய், கபத்தினால் உண்டாகும் நோய்கள்,வாந்தி, விக்கல் மற்றும் சீறுநீர் பையில் வலி ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது” என்று குறிப்பிடுகிறார்.
குளிர்ச்சியான மோர் தயிர் முதலியவைகளை அப்படியே உபயோகிக்க முடியாத போது அவைகளில் ஓமத்தைத் தாளித்து அதன் குளிர்ச்சியைக் குறைப்பார்கள். மோர்க்குழம்பு, ரஸம் தயாரிக்கும் போது இதை வெடிக்கவிட்டுச் சேர்ப்பர். வயிறு சம்பந்தப்பட்ட நோய் அனைத்திற்குமான மருந்துகளில் ஓமத்திற்கு முக்கிய இடமுண்டு. ருசியின்மை, பசிமந்தம், வயிற்று உப்புசம், வயிறு இருகிக்கட்டிக் கொள்ளுதல், வயிற்றுவலி, கிருமியால் வேதனை இவைகளில் ஓமமும் உப்பும் சேர்ந்த சூர்ணம், ஓம கஷாயம், ஓமத்தீநீர் இம்மூன்றும் மிகவும் உதவக்கூடியது.

“அஜமோதா கடுஸ்திக்தா மலாவஷ்டம்ப காரிணீ
உதராணி கிருமீம்ஸ்சைவ வாந்திநேத்ரருஜம் ஜயேத்
வஸ்திசூலம் தந்தரோகம் குல்மம் சுக்லருஜம் ததா*”
-நிகண்டு ரத்னாகரம்.
பல் நோய்களுக்கும், குல்மம் எனப்படும் குடல் வாயு நோய்க்கும்,விந்து வெளிப்படுகையில் ஏற்படும் வலியிலும் ஓமம் சிறந்த மருந்தாகும் என்று நிகண்டு ரத்னாகரம்.
ஒரு கிலோ ஓமத்தை 8 லிட்டர் ஜலம் விட்டு காய்ச்சித் தீநீர் (4 லிட்டர் வரை) இறக்குவதற்கு அஜமோதார்க்கம் என்று பெயர். (அர்க்கம்-Distilled water -தீநீர்) . இது சிறந்த ஜீர்ண காரி. வயிறு சம்பந்தப்பட்ட நோயனைத்திலும் நல்லது. வயிற்று வேக்காளம் ஏற்பட்டுள்ள நிலைகளில் ஏற்றதல்ல. அஜீர்ணமான வயிற்றுப் போக்கு,கிருமிகளால் ஏற்படும் உப்புசம், வயிற்றுப் போக்கு இவைகளில் மிகவும் சிறந்தது.
“அஜமோதா ச சூலக்னீ திக்தோஷ்ணா கபவாதஜித்
ஹிக்காத்மான அருசிர்ஹந்தி கிருமிஜித் வஹ்னி தீபனீ
-தன்வந்திரி நிகண்டு.
ஓமம் வயிற்று வலியை நீக்கும், கசப்பானது, சூடான குணமுடையது,கப வாதத்தைப் போக்கும். விக்கல், வயிறு உப்புசம், ருசியின்மை,கிருமி ஆகியவற்றை நீக்கும், பசியைத் தூண்டும் என்று தன்வந்திரி நிகண்டு குறிப்பிடுகிறது.
ஓமத்தை சுட்டுக் கரியாக்கித் தூளாக்கி தேனில் 5-6 டெஸிக் கிராம் அளவு கொடுக்க வயிற்று வேக்காளத்துடன் குழந்தைகளுக்கு ஏற்படும் உஷ்ண பேதியில் மிகவும் நல்லது.
நாட்பட்ட இருமல், மூச்சுத் திணறலிலும் கபம் வெளிவருவதற்கு ஓமம் சிறந்தது. இதன் தூளைப் புகைபிடிப்பதால் கபம் எளிதில் பிரிந்து இருமல் சிரமத்தைக் குறைக்கும்.
ஓமம் மிளகு வகைக்கு 20 கிராம். இவைகளை லேசாக வறுத்துத் தூளாக்கி வெல்லம் 20 கிராம் சேர்த்து நன்கு சேரும்படி இடித்து கலந்து கொள்ளவும். 1/2 ஸ்பூன் முதல் 1 ஸ்பூன் (5 கிராம்) அளவு காலை மாலை 10 நாள் சாப்பிட வயிற்றுக்கடுப்பு, பொருமல், அஜீர்ணபேதி நீங்கும்.
வீக்கம், வலி, தேள் கொட்டின கடுப்பு இவைகளில் ஓமத்தையோ, ஓம உப்பையோ (Thymol) ஜலத்தில் இழைத்து பத்துப்போட வேதனை குறையும். வயிற்று உப்புசம், வலியில் ஓமத்தை அரைத்து பத்துப் போடுவதும், அதை வறுத்து ஒத்தடம் கொடுப்பதும் நல்ல குணம் தரும். கீரிப்பூச்சி என்னும் கிருமி நோயில் வேப்பிலை கொழுந்தும் ஓமமும் அரைத்தும் ஜலம் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொடுப்பது உண்டு. பிரசவித்த மாதருக்கு கர்ப்பாசயம் பலம் குன்றியிருப்பதால்,அவர்களுக்கு தரும் லேஹ்யத்தில் நல்ல பலம் தரும் ஓமம் முதலிடம் பெறும். ஓம உப்பை ஜலத்தில் கரைத்துப் புண்களை அலம்புவதால் புண்கள் சீக்கிரம் ஆறும். நாற்றமும் குறையும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 visitors online now
0 guests, 1 bots, 0 members