Search
Tuesday 28 March 2023
  • :
  • :

நீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம்

நீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம் (நெட்டிலிங்கம்)

  • எம் இல்­லங்­களின் சுற்­று­சுவர் பகு­தியை ஒட்டி அழ­குக்­கா­கவும், மறை­விற்­கா­கவும் அசோகா மரம் வளர்க்கப் படு­வதை அறிந்­தி­ருக்­கிறோம். ஆனால் அந்த அசோகா மரம் மருத்­துவ குணத்தைக் கொண்­டி­ருக்­கி­றது என்று எத்­த­னை­பே­ருக்குத் தெரியும். இதன் மருத்­துவ குணத்தை அறிந்த பின் இந்த மரத்தை மேலும் அனே­க­மா­ன­வர்கள் வளர்க்­கக்­கூடும். இந்த அசோகா மரத்தைப் பற்­றிய ஒரு உண்­மையைச் சொல்­கிறோம். இந்த மரம் எம்­மண்­ணினை தாய­கமாக் கொண்­டது. இங்­கி­ருந்து தான் இந்­தியா உள்­ளிட்ட பல தேசங்­க­ளுக்கு பிர­யா­ணித்­தது.

    மருத்­து­வத்தில் அதிலும் குறிப்­பாக சித்த மருத்­து­வத்தில் இதன் பெயர் நெட்­டி­லிங்கம். கோடைக்­கா­லத்தில் பல­ருக்கு வியர்வை பெருக்­கெ­டுத்து ஓடும். அவ­ரிடம் நின்று பேசக்­கூட பலரும் தயங்­குவர்.431

    ஏனெனில் அவ­ரி­ட­மி­ருந்து வெளி யாகும் வியர்வை துர்­நாற்றம். இந்த துர்­நாற்­றத்­திற்கு முக்­கிய காரணம் வியர்­வையில் வளரும் பூஞ்­சைகள் தான். இந்த பூஞ்­சை­க­ளுக்கு ஈரம் என்றால் கொண்­டாட்டம் தான். வியர் வையை உண­வாக கொண்டு வாழும் இந்த பூஞ்­சைகள் முதலில் உடலில் அரிப்பை ஏற்­ப­டுத்தும்.

    நாள­டைவில் அதுவே படை­யாக மாறி­விடும். இவற்றை நீக்­க­வேண்டும் என்றால் பல துறை மருத்­து­வர்­களை நாடிச் சென்று அவர்கள் எழுதி தரும் களிம்­பு­க­ளையோ அல்­லது மருந்­து­க­ளையோ பூசிக்­கொள்­ள­வேண்டாம். வீட்டின் முன் பகு­தியில் அழ­குக்­காக வளர்ந்­தி­ருக்கும் நெட்­டி­லிங்கம் மர இலை­களே போது­மா­னது. அதா­வது அசோகா மர இலை­களே போது­மா­னது.நெட்­டி­லிங்­கத்தின் பட்டை அல்­லது இலை­களை (ஐந்து முதல் பத்து இலைகள்) இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் தண்­ணீ­ராக வரும் வர கொதிக்­க­வைக்­க­வேண்டும். பிறகு அந்த தண்­ணீரை வடி­கட்டி குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கிரு­மிகள் அழி­வ­தோடு, இந்த வியர்­வை­யி­லி­ருந்து வரும் துர் நாற்ற தொல்­லை­க­ளி­லி­ருந்தும் விடு­ப­டலாம். அதே போல் நெட்­டி­லிங்­கத்தின் பட்­டையை உரித்து எடுத்து வந்து நீரில் போட்டு, நன்­றாக கொதிக்­க­வைத்து, வற்­றிய பிறகு அந்த வடி­கட்­டிய நீரை படை உள்ள இடங்­களில் தடவி வர, படை மறைந்து வரு­வதை கண்­கூ­டாகப் பார்க்­கலாம்.இந்த நெட்­டி­லிங்­கத்தின் இலைக்கு புற்­று­நோயை விரட்டும் தன்­மையும், ஹெச் ஐ வி எனும் உயிர்­கொல்லி நோயின் வீரி­யத்தை கட்­டுப்­ப­டுத்தும் தன்­மையும் இருப்­ப­தாக ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. அதே போல் காய்ச்சல் தரு­ணத்தில் உடலின் வெப்­பத்தை குறைக்கும் தன்­மையும் இந்த அசோகா இலைக்கு உண்டு.

    இந்த இலைச்­சாற்றை நீரி­ழிவால் பாதிக்­கப்­பட்­டவர் களுக்கு ஒரு அரு­ம­ருந்து என்றேச் சொல்­லலாம். சர்க்­க­ரையின் அளவு அதி­க­ரித்­து­விட்­டதோ என் நீங்கள் கருதி னால் இரண்டு இலை­களை எடுத்து அதி­லி­ருந்து சாறெ­டுத்து அருந்­தலாம். அருந்­திய பின் பரி­சோ­தித்தால் சர்க்­க­ரையின் அளவு கட்­டுக்குள் இருப்­பதை அறி­யலாம். அதே தரு­ணத்தில் ஓரிரு இலை­க­ளைத்தான் எடுத்து சாறெ­டுத்து அருந்­த­வேண்டும். ஏனெனில் நெட்டி லிங்­கத்தின் இலைகள் அதிக குளு­மை­யா­னவை. அதி­க­மாக குடித்தால் உடல் வெப்­பத்தை ஒரே­யடி யாக குறைத்து ஜன்­னியை வர­வ­ழைத்­து­விடும்.

    ஒரு சில­ருக்கு பனிக்­கா­லத்தின் போது வறட்டு இருமல் அதி­க­ரிக்கும். இத்­த­கைய தரு­ணத்தில் அசோகா மரத் தின் பட்­டையை போட்டு கஷாயம் தயா­ரித்து அருந்தி னால் இருமல் குறையும். ஒரு வாரம் வரை தொடர்ந்து குடித்தால் இருமல் மறைந்துவிடும். இந்த இலையில் இருக்கும் வேதிப்பொருள்கள் எம் உடலில் தேவையற்ற பாக்டீரியாக்களை அழித்து, அண்ட விடாமல் செய்து விடும்.- டொக்டர்.

    ஜி. சிவராமன், M.D., (Sidha)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 visitors online now
0 guests, 1 bots, 0 members